தொலைந்து போனோம்...
எப்படி சொல்வது?
உன்னை எழுப்பிய
நள்ளிரவு வேளையில்
தூக்கக் கலக்கத்திலும்
வெட்கம் கலந்து
நீ சிரித்த
அந்த சிரிப்பை...
ஒருவழியாய்
வெட்கம் தொலைத்து
அருகில் வந்தமர்ந்த உன்
உச்சி முகர்ந்து
தந்த முத்தத்தில்
தொலைந்து போனேன்...
பேசமுடியாத
ஊமையானேன்...
முதல் ஸ்பரிசம்
என்பதாலோ என்னவோ?
என்னவோ
தெரியவில்லை?
இரவு வந்துவிட்டால்
உனக்குள் ஒரு
அதீத தைரியமும்
வந்து விடுமோ?
மார்பில்
உன் முகம் புதைத்த
போது ஒரு குழந்தையின்
ஸ்பரிசத்தை உணர முடிந்தது...
காமத்திற்கு அங்கு
இடமில்லாமல் போனது...
கற்றை முடி விளக்கி
நீ தந்த முத்தத்தில்
ஒரு தாயின் ஸ்பரிசத்தை
உணர முடிந்தது...
தாரத்தின் வடிவில்
மற்றுமொரு தாய்...
வாடிப்போன
என் இதழ்களுக்கு
புத்துயிர் கிடைத்தது
உன் பூவிரல்களால்
தொட்டு வருடிய போது...
எனக்கே என்
இதழ்களை பிடித்துப்போனது
உன் பூவிதழ்களால்
என் இதழ்கள் நனைத்த போது...
இதுவரை
கண்டிராத சுவையை
கண்டு கொண்டேன்
உன் இதழ்களில்...
இதுவரை
நுகராத வாசனையை
நுகர்ந்தேன்
உன் மேனியில்...
காமம் கண்விழித்து
பால் மாறிப்போனோம்
சற்று நேரத்தில்...
நீ ஆண் பாலாய்...
நான் பெண் பாலாய்...
உன் பயம்
கலந்த ஆக்கிரமிப்பு
என்னை
திக்குமுக்காடச் செய்தது...
முத்தமிட முயலுகையில்
இருவரும் முகம் விலக்கி
விளையாடியதும்...
தழுவலின் போது
புதிய மொழியை
வெளியிட்டதும்...
வெளிச்சத்தில்
உன் நிலா முகம்
பார்க்க முயற்சித்த
என்னை தடுத்ததும்...
இது புதிது தான்
இருவருக்கும்...
இரசிக்கும்படியாகவே இருந்தது
செய்தவைகள் யாவும்...
இருவருமே
எதையோ தேடித் தேடி
தொலைத்து போனோம்
உனக்குள் என்னையும்...
எனக்குள் உன்னையும்...
Courtesy:
Sasikumar - Pune
Monday, January 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
machann chance-e illa... unmaileye romba romantic-a iruku.... ithu mathiri innum neraya lyrics vechruntha athayum post pannu....
enna oru alagahna kavithai...
just too good !!
Post a Comment